logo
இறுதி கட்டத்தை எட்டுகிறது தமிழக தேர்தல் பிரசார களம்

இறுதி கட்டத்தை எட்டுகிறது தமிழக தேர்தல் பிரசார களம்

02/Apr/2021 08:05:01

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. 


234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சமாக வால்பாறை, கோபிசெட்டிபாளையத்தில் தலா 6 பேரும், திண்டிவனம், கூடலூரில் தலா 7 பேரும் களத்தில் உள்ளனர்.

இதேபோன்று கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஏப்ரல் 4-ஆம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று தலைமை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல்வாக்குப்பதிவு ஏப்ரல் 6 -ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. மே மாதம் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வாக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவு வெளியாகிறது. 


Top