27/Sep/2020 05:51:42
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பனங்குடியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் இன்று (27.9.2020) நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத்துறையின் சார்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடையை தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது: கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.. அந்த வகையில் பொது மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 9,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமாh; 10,000-க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடியிருப்பிலேயே பொருட்களை பெற்று பயன்பெறுவதுடன் நீண்ட தூரம் சென்று அலையத்தேவையில்லை.
அந்த வகையில் அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி, மக்களை தேடி அரசு என்ற நிலை உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது பனங்குடியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மண்ணவேலாம்பட்டியில் இருக்கும் பனங்குடி அங்காடி 385 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நகரும் நியாய விலைக்கடை அங்காடியானது பனங்குடி தாய் அங்காடியிலிருந்து 180 குடும்ப அட்டைகளை பிரித்து நகரும் நியாய விலைக்கடை அங்காடியாக செயல்பட உள்ளது. இதன் பயனாக 180 குடும்ப அட்டைதாரர்கள் 1.5 கி.மீ தூரம் சென்று பொருட்கள் பெற்று வந்த நிலைமாறி தங்களது இருப்பிடங்களிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.
மேலும், பனங்குடி பொதுமக்களுக்கு சாலைவசதி, கலையரங்கம், மின்சாரவசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். இதில், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா; எம்.உமாமகேஸ்வரி, துணைப்பதிவாளர் அண்ணாத்துரை, ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சாம்பசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.