logo
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில்  கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு அபராதம்

19/Mar/2021 10:00:49

ஈரோடு, மார்ச்: கொரோனா  தொற்று பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாட்டின் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரம் கேரளம் போன்ற மாநிலங்களில் கொரோனா  வேகமாக பரவி வருகிறது.  தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில்  தினசரி பாதிப்பு  வெள்ளிக்கிழமைஆயிரத்தை நெருங்கி விட்டது. தமிழகத்தில் தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதையடுத்து அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். 

ரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

முக கவசம் அணிந்து வராதவர்களுக்கு  தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்  மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர் ,வருவாய்த்துறையினர் ,மாநகராட்சி பணியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.கதிரவன் மாவட்டம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள் உணவகங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு வழிமுறை களை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 முதல் 5000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதில் சில கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மட்டும் முகக் கவசம் அணியாமல் வரும் 500 நபர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஈரோட்டில் வெள்ளிக்கிழமை  மட்டும் இதுவரை இல்லாத அளவாக அதிரடியாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் என 2,152 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டதாக  சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதைப்போன்று  தினமும் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்

Top