19/Mar/2021 05:24:23
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆர்.சரவணன் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான தண்டபாணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை மத்திய மாவட்ட பொருளாளர் முருகவேல், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட வழக்குரைஞர்கள் அணி மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.