logo
ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற தங்க கட்டிகள், தங்க செயின்கள் மற்றும் 2 லட்சம் ரொக்கம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற தங்க கட்டிகள், தங்க செயின்கள் மற்றும் 2 லட்சம் ரொக்கம் பறிமுதல்

18/Mar/2021 10:33:43

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 250 கிராம் தங்கக் கட்டி 660 கிராம் கொண்ட 20 தங்கச் செயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரும் ஒப்படைத்தனர். 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தொடர்ந்து வாகனத் தணிக்கை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மின்ன வேட்டுவபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது கோபியில் இருந்து  ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் பிரவீன் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், 250 கிராம் எடைகொண்ட தங்க கட்டி, 48 தங்க காசுகள், 660 கிராம் எடை கொண்ட 20 தங்கச் சங்கிலி,8 தங்க கொடி, 24 கிராம் எடை கொண்ட இரண்டு வளையல், 16 கிராம் முகப்பு தங்கத் தகடு உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.



இதையடுத்து  தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்தையும் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சீலிடப்பட்டு  மாவட்ட கருவூலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒப்படைத்தார்.

Top