logo
ஈரோடு மாவட்டத்தில்  இரு இடங்களில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 36.58 லட்சம்  பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இரு இடங்களில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 36.58 லட்சம் பறிமுதல்

18/Mar/2021 04:26:11

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில்  இரு வேறு இடங்களில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 36.58 லட்சம்  பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்கிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வீரப்பம்பாளையம் பிரிவு அருகே நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி பிரபு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதை காரை நிறுத்தி சோதனை செய்தனர் சோதனையில் அந்த காரில் ரூ 35 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை.காரை ஓட்டி வந்தவர் நசீர் ஷேக் மூகமது பாஷா என்பதும் அவர் பழ மொத்த வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து  பணத்தை கைப்பற்றிஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.58 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்பட்டியில்   முருகேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது  கர்நாடக மாநிலத்தில் கோழி கழிவுகளை இறக்கி விட்டு, நாமக்கல் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையில் நாமக்கல் மாவட்டம் என் புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவக்குமாரிடம், உரிய ஆவணமின்றி வைத்திருந்த  1.58 லட்சம்  ரொக்கத்தை   பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மா. இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.

வங்கி ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு சென்றபோது பறிமுதல் செய்த ரூ.2.05 கோடி ரொக்கப்பணம்  திரும்ப ஒப்படைப்பு

ஈரோடு சத்தி சாலையில்  உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்(ஐ.ஓ.பி) இருந்து, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்ப தனியார் ஏஜென்சியின் வாகனத்தின் மூலம் பணம் எடுத்து வரப்பட்டது. அந்த வாகனத்தை நிலைக்கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில், ரூ.2 கோடியே 5லட்சம் ரொக்கம் இருந்தது. 

இதில், ரூ.1 கோடியே 65லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால், மொத்த பணத்தையும் வாகனத்துடன் கைப்பற்றிஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் மா.இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மீதமுள்ள ரூ.40 லட்சத்திற்கு உரிய கணக்குகளை காண்பித்தனர். இதைத்தொடர்ந்து வங்கி பணத்தையும், வாகனத்தையும் விடுவித்தனர்.

Top