logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய இளம் வாக்காளர்கள்  21,279  பேர் உள்ளனர்: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய இளம் வாக்காளர்கள் 21,279 பேர் உள்ளனர்: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

15/Mar/2021 09:47:48

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய இளம் வாக்காளர்கள்  21,279  பேர்  வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி  தகவல் தெரிவித்தார்.

 இது குறித்து,  மேலும் அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-இன் போது வாக்காளார் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர் அடையாள அட்டை  (eEPIC) National voters service Portal (NVSP) இணையதளம் வாயிலாக வழங்குவது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரைகள்  வழங்கியுள்ளது. இதன் மூலம் இளம் வாக்காளர்கள் தங்கள் மின் வாக்காளர் அட்டைகளை தங்கள் அலைபேசியில் பின்வருமாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

WWW.nvsp.in  மற்றும் https://nvsp.in    இந்த இணையத்தளத்தில் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். வாக்காளப்அடையாள அட்டை எண் அல்லது படிவ எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும்OTP- ஐ சரிபார்த்து உள்ளிட வேண்டும்.

இ-வாக்காளர் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை (eEPIC) என்பதை  தேர்வு செய்து தங்களது இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.  இதற்கான சிறப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (13.03.2021) மற்றும்  ஞாயிற்றுக்கிழமை (14.03.202) நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் அடிப்படையில்,  கந்தர்வக்கோட்டை(தனி) சட்டமன்ற தொகுதியில் 2,826 இளம் வாக்காளர்களும், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 409 இளம் வாக்காளர்களும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 5,295 இளம் வாக்காளர்களும்.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் 5,286 இளம் வாக்காளர்களும் உள்ளனர்.  ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 2,893 இளம் வாக்காளர்களும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 4,570 இளம் வாக்காளர்களும் என மொத்தம் 21,279 இளம் வாக்காளர்கள்  சேர்க்கப்பட் டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவவர் பி. உமாமகேஸ்வரி  தெரிவித்தார்.

Top