14/Mar/2021 09:02:51
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் நாகவேதன்பாளையம் ஊராட்சி பெரிகொரவம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் சண்முகசுந்தரம் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெரியகொரவம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை சி பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி.2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
பிரபல மசாலா நிறுவத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ள கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மளிகைக்கடைகளில் மசாலா பொருட்கள் விற்பனை செய்து வசூலித்த தொகை என பறக்கும்படையினரிடம் தெரிவித்தாாராம்.
வசூலித்த தொகைக்கு உரிய கணக்கு ஆதாரங்கள் இல்லாததினால் அப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்து கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிதேவியிடம் ஒப்படைத்தனர்.