logo
வாக்காளர்கள் அச்சமின்றி   வாக்களி செய்வதை உறுதி செய்ய கோபிசெட்டிபாளையம் போலீஸார்  கொடி அணிவகுப்பு

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களி செய்வதை உறுதி செய்ய கோபிசெட்டிபாளையம் போலீஸார் கொடி அணிவகுப்பு

04/Mar/2021 10:57:34

ஈரோடு, மார்ச்: கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்கள் பயமின்றியும் பாதுக்கப்புடனும் வாக்களிக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் உள்கோட்ட  காவல்துறை மற்றும் மத்திய தொழில்நுட்பப் பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு  மாவட்டகாவல் கூடுதல் கண்காணிப்பாளர் பொன்கார்த்திக்குமார் தலைமையில் நடைபெற்றது.


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம்  தேர்தல் பணிகளைதீவிர ப்படுத்தியுள்ளது.. வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பு வாக்குசாவடி மையங்கள் ஆய்வுவாக்கு எண்ணும் மையங்கள் சோதனைஎனபல்வேறு கட்ட நகர்வுகளுக்கு மத்தியில் தேர்தல் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சிகள் என தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. காவல்துறையினர் சார்பியில் பறக்கும் படைகண்காணிப்பு நிலைக்குழு உள்ளிட்ட பணிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.


 இந்நிலையில் மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு  வரவழைக்கப் பட்டு  ஒவ்வொரு தொகுதிலும் பாதுகாப்பு பணிக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம்,  கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்களர்கள் பயமின்றியும் பாதுகாப்புடனும் வாக்களிக்க கோபிசெட்டி பாளையம் உள்கோட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிநுட்ப பாதுகாப்புப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர். 


 இந்தஅணிவகுப்பில் ஏடிஎஸ்பிகனகேஸ்வரி, டிஎஸ்பிதங்கவேல் ஆகியோர் முன்னிலையில் மூன்று காவல் ஆய்வளார்கள் 30 காவலர்கள் 65-க்கும் மேற்பட்ட மத்தியதொழில் நுட்ப பாதுகாப்பு படையினர் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 


இந்தஅணிவகுப்பு நாய்க்கன்காடு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி புதுப்பாளையம் பேருந்துநிலையம், கச்சேரிமேடு, கடைவீதி, பெரியார்திடல் ல.கள்ளிப்பட்டி வழியாகசென்று நல்லகவுண்டம்பாளையம் அருகேஉள்ளதனியார் திருமணமண்டபத்தில் முடிவடைந்தது.

கொடிஅணிவகுப்பின் போதுவாக்களார்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடனும் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகை யிலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் இரும்புக்கரம் கொண்டுஅடக்க காவல்துறை மற்றும் மத்தியதொழில்நுட்ப பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி கொடிஅணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

Top