logo
தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் ஏப்ரல்-6-ஆம் தேதி தேர்தல்:  மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மே.2-இல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் ஏப்ரல்-6-ஆம் தேதி தேர்தல்: மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மே.2-இல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையர் அறிவிப்பு

26/Feb/2021 05:40:56

தமிழகம், புதுவை உட்பட தேர்தல் நடைபெறும் 5  மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தமிழக சட்டசபை பதவி காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்.தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்.குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி துறைமுகம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021:

வேட்புமனு தாக்கல் - மார்ச் 12-இல் தொடங்குகிறது. தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 19, மனு மீதான பரிசீலனை - மார்ச் 20, வாபஸ் பெறுவது மார்ச் 22. வாக்குப்பதிவு - ஏப்ரல் 6. வாக்கு என்ணிக்கை - மே 2.

மேற்கு வங்காளம் - 294 தொகுதிகள்; அஸ்ஸாம் - 126 தொகுதிகளில் தேர்தல்.தமிழ்நாடு - 234 தொகுதிகள்; புதுச்சேரி - 30 தொகுதிகள்; கேரளா - 140 தொகுதிகள்.5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள 826 தொகுதிகளில்  2.7 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

அனைத்து வாக்கு சாவடிகளும் தரை தளத்தில் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

 வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. 80 வயது மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி.5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நேரமும் அதிகரிப்பு. வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி.80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல.வேட்பு மனுத் தாக்கலுக்கு 2 பேருக்கு மட்டுமே அனுமதி.வேட்பு மனுத் தாக்கலின் போது 2 வாகனங்களில் வருவதற்கு மட்டும் அனுமதி. தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமனம்.

அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ பதிவு:

 தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. விழாக்கள் பண்டிகைகள்  தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் .அதுபற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவர். தமிழகத்தில் தொகுதிக்கு தேர்தல் செலவு செய்ய ரூ.30.8 லட்சம் அனுமதி.

Top