logo
புதுக்கோட்டை டி.இ.எல்.சி. மேல்நிலைப்பள்ளியில் என்.எம்.எம்.எஸ். தேர்வு.

புதுக்கோட்டை டி.இ.எல்.சி. மேல்நிலைப்பள்ளியில் என்.எம்.எம்.எஸ். தேர்வு.

21/Feb/2021 10:50:22

புதுக்கோட்டை, பிப்: அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான போட்டித் தேர்வு புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான தேர்வு  நடத்தப்படுகிறது. மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

மத்திய / மாநில அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பில் பயிலும் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைப்சேர்ந்த மாணவர்கள் 50%, ஏனையோர் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் ) மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் தேர்வெழுதத் தகுதியுடையவர்கள்.

 தேர்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500/- உதவித்தொகையாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 6695 மாணவர்களுக்குப் படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் புதுக்கோட்டை டிஇஎல்சி  மேனிலைப்பள்ளியில் ஞாயிற்றக்க்கிழமை நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள்  109 பேர்  தேர்வு எழுதினர். பள்ளியின் தலைமையாசிரியர் சத்தியராஜ்  தேர்வு பணிகளை மேற்பார்வையிட்டார்.



Top