logo
கீழயில் அடுத்தவாரம் 7-ஆம் கட்ட அகழாய்வு: கொந்தகை, அகரத்திலும் நடத்த முடிவு

கீழயில் அடுத்தவாரம் 7-ஆம் கட்ட அகழாய்வு: கொந்தகை, அகரத்திலும் நடத்த முடிவு

07/Feb/2021 07:04:35

திருப்புவனம், பிப்: சிவகங்கை மாவட்டம், கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள 7 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

2015 -ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை 6 கட்டங்களாக நடைபெற்றுள்ள அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் நகர நாகரீகம் வாழ்க்கை முறையை அறியும் வகையில், தங்க ஆவணங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த மண்பாண்ட பொருட்கள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் போன்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற கூடிய இடத்தில் முட்களை வெட்டி சுத்தப்படுத்தப்படும் பணிகளானது தொடங்கப்பட்டு உள்ளது. 10 ஊழியர்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 2015 -ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை 6 கட்ட அகழாய்வு நடைபெற்று உள்ளது.

Top