logo
ஈரோட்டில் பொங்கல் விழாவையொட்டி களை கட்டிய புது பானை விற்பனை

ஈரோட்டில் பொங்கல் விழாவையொட்டி களை கட்டிய புது பானை விற்பனை

11/Jan/2021 09:58:16

ஈரோடு, ஜன: பொங்கல் விழாவையொட்டி புது பானைகளில் பொங்கல் வைத்து வழிபடும் மக்களுக்காக, மக்கள் விரும்பும் வகையில், தேவைக்கு ஏற்ப தயார் செய்யப்பட்ட புதிய மண் பானைகள், ஈரோடு மாநகர சாலையோரங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருவிழாவுக்கு இன்னும் சில  நாட்களே இருக்கும் நிலையில் பானை விற்பனை  களைகட்டியுள்ளது.

இது குறித்து மண்பானை வியாபாரி குமார் கூறியதாவது: நாகரீக காரணமாக மண் பானையில் பொங்கல் வைப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருந்தாலும், காலங்காலமாக, மண்பனைகளில் பொங்கல் வைப்போர் மாறவில்லை. ஈரோட்டில், அரசு அலுவலகம், தனியார் பள்ளி கல்லுாரிகளை சேர்ந்த பலர், விவசாய தொழிலாளர்கள் பலர்  பொங்கல் பானைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

காவிரி ஆற்றின் கரையான திருச்சி மற்றும் வைகை ஆற்றின் கரையான சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பானைகள் நல்ல நேர்த்தியாக இருக்கும் காரணத்தாலும், மதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பானைகள் உறுதியாக இருக்கும். அப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பானைகள் ஈரோட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. 

வண்ணம் தீட்டப்படாத பானைகள், ரூ.150 ரூபாய் முதல், ரூ.400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வண்ணம் தீட்டப்பட்ட பானைகள்  ரூ. 200  முதல், ரூ. 450 வரை உள்ளது. மண் அடுப்புகள், ரூ.180 முதல் விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த ஆண்டை காட்டிலும் சற்று விலை உயர்ந்துள்ளது.

குக்கர், அலுமினியம், எவர் சில்வர், போன்ற, விலை உயர்ந்த பாத்திரங்களை ஆண்டும் முழுவதும் பயன்படுத்தும் நகர வாசிகள், பொங்கல் போன்ற திருவிழா காலங்களில், உடல் நலத்துக்கு ஆரோக்கியாமான மண் பாத்திரங்களை பயன்படுத்தினால் மண்பானை உற்பத்தியாளர்களில் வாழ்வாதாரம் உயரும், நம் உடலும் ஆரோக்கியம் பெறும்  என்றார் அவர்.                                                    

        


Top