logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  4.63 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி-4 முதல்  பொங்கல் பரிசு விநியோகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.63 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி-4 முதல் பொங்கல் பரிசு விநியோகம்

03/Jan/2021 12:00:04

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ள 4.63 லட்சம்  குடும்ப அட்டைதாரர்களுக்கு   நாளை (4.1.2021) முதல்  அவர்களுக்கு    டோக்கன் வழங்கப்பட்ட நேரத்தில் நியாய விலைகடைகளில் விநியோகிக்கப்படும்.

 இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

   2021-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2,500 வழங்கப்படுகிறது.


  இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2,500 -ஐ தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலமாக  4.01.2021 -இல் தொடங்கி 12.1.2021 -தேதிக்குள் வழங்கி முடிக்கவும், விடுபட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர் களுக்கு 13.1.2021 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை புதுக்கோட்டை மாவட்டத்தில், புழக்கத்தில்  உள்ள 4,63,988 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரா;களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. 

தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும்; விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைபெறுவதற்கும் , நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் )  மூலமாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக் கும் வழங்கும் நாள் நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 26.12.2020 முதல் 30.12.2020 முடிய வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்க வும் முற்பகலில் பொருட்கள் பொறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கவும், குறிப்பிட்ட நாளில் பொறாத குடும்ப அட்டைதாரர்க ளுக்கு 13.01.2021 அன்று வழங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும், மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார்  சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும் . ஒரு  குடும்ப அட்டைக் கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல வர  வேண்டும். 

மின்னணு குடும்ப அட்டைகள் தொலைந்து போன இனங்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர் எவரேனும் ஒருவரது ஆதார் அட்டையினை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட அலைப்பேசியில் பெறப்படும் கடவுச் சொல்லைக் கொண்டோ பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை  ரூ .2,500-ஐ பெறறுக் கொள்ளலாம்.  

கொரோனா வைரஸ் நோயிலிருந்து  குடும்ப அட்டைதாரர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து  பொருட்கள் பெற்றுச் செல்லவும், குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. 

புதுக்கோட்டை  மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருந்தால், தனி வட்டாட்சியர் புதுக்கோட்டை- 9445000312. தனி வட்டாட்சியர் ஆலங்குடி-  9445000313. வட்ட வழங்கல் அலுவலர் குளத்தூர்- 9445000314. வட்ட வழங்கல் அலுவலர், கந்தர்வக்கோட்டை- 9445000315. வட்ட வழங்கல் அலுவலர், திருமயம் 9445000316. தனி வட்டாட்சியர் அறந்தாங்கி- 9445000317. 

வட்ட வழங்கல் அலுவலர் ஆவுடையார்கோவில்- 9445000318. வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி- 9443870034. 9445000320. வட்ட வழங்கல் அலுவலர் பொன்னமராவதி-  9445000404, வட்ட வழங்கல் அலுவலர், கறம்பக்குடி - 9445000405.   வட்ட வழங்கல் அலுவலர் இலுப்பூர்- 9445000319,  வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை-  9080487553  ஆகிய  அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

Top