logo
அந்தியூர் அருகே வனப்பகுதியில் வேனில் அமர்ந்து மது அருந்திய 14 பேருக்கு வனத்துறையினர் அபராதம்

அந்தியூர் அருகே வனப்பகுதியில் வேனில் அமர்ந்து மது அருந்திய 14 பேருக்கு வனத்துறையினர் அபராதம்

28/Dec/2020 05:02:04

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை சிறுத்தை கரடி மான் செந்நாய் மற்றும் பலவகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாகத் தகவல் வந்ததை அடுத்து அந்தியூர் வனத்துறையினர் இப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தர சாமி தலைமையில் வனத்துறையினர் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது,அணையின் மேல் பகுதியில் சுற்றுலா வேன் நிற்பதை அறிந்து அந்த வேனை திடீரென சோதனை செய்தனர் சோதனை செய்ததில் அதில் இருந்த 14 பேர் வாகனத்தில் அமர்ந்தபடி மது அருந்திக் கொண்டிருந்தனர்அவர்களிடம் விசாரணை செய்ததில் அனைவரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தியூர் தாமரைக்கரை பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு சுற்றுலா வந்ததாகவும் வரும் வழியில் வாகனத்தில் அமர்ந்து மது அருந்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் விஷ்மிஜு விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் வேனில் இருந்த 14 பேருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

வனத்துறையினர் தெரிவிக்கும் பொழுது அந்தியூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வாகனத்தை நிறுத்தி வனப்பகுதிகளில் புகைப்படங்கள் எடுப்பதும் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Top