logo
சொத்தை ஏமாற்றி உறவினர் அபகரிப்பு: உடல்நலம் பாதித்த மகனுடன் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து தாய் புகார் மனு

சொத்தை ஏமாற்றி உறவினர் அபகரிப்பு: உடல்நலம் பாதித்த மகனுடன் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து தாய் புகார் மனு

24/Dec/2020 08:29:59

ஈரோடு, டிச: ஈரோடு எஸ். பி .அலுவலகத்திற்கு  நம்பியூர், நிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்ற மூதாட்டி உடல்நலம் பாதித்த தனது மகன் சோமசுந்தரத்துடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து எஸ்.பி. தங்கதுரையை சந்தித்து மனு அளித்தார். 

அந்த மனுவிவரம் :  நம்பியூர் நிச்சம் பாளையம் பகுதியில் உடல்நலம் பாதித்த எனது மகனுடன் வசித்து வருகிறேன். எனது மாமனார் பொங்கிய மூப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். எனது கணவர் மாரிமுத்து மாமியார் கருப்பாயி அம்மாள் ஆகியோர்  கடந்த 2006 ஆண்டு இறந்து விட்டனர். எனது மாமியார் நெடுஞ்சாலைத்துறை வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் ஓய்வு பெற்ற பின் வந்த பணத்தை அனைத்தையும் வங்கியில் டெபாசிட் செய்தார். மேலும் எங்கள் வீட்டில் 6 பவுன் நகைகள் இருந்தது.

இந்நிலையில், எங்கள் வீட்டு எதிர் வீட்டில் உறவினர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் உறவினர் மகன் எனது மாமியார் கருப்பாயி அம்மாள் ஏமாற்றி வீட்டில் இருந்த நகை வங்கி கணக்கில் இருந்த பணம், சொத்து அனைத்தையும் அவரது பெயரில்  உயில் எழுதி மாற்றிக் கொண்டார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னை மிரட்டினார். இதையடுத்து நான் நம்பியூர்  போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தேன். அதன்பேரில் கடந்த 2015-ம் ஆண்டு நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது எனது உறவினர் மகன் அனைத்து சொத்துகளையும் திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார்.  ஆனால் இதுவரை அவர் சொத்துக்களை திருப்பிக் கொடுக்கவில்லை.

 தற்போது எனது மகன் சோமசுந்தரம் உடல்நிலை மிகவும் பாதித்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். அவன் செலவுக்கு வழி தெரியாமல் நான் நிற்கிறேன். எனது மகனின் மருத்துவச் செலவிற்காக உறவினர் மகனிடம்  எனக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டேன். அதற்கு உறவினர் மகன் என்னையும் எனது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். எனவே, எங்களிடமிருந்து அபகரித்த சொத்துக்களை மீட்டு தரவேண்டும் மேலும். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Top