logo
ஈரோட்டில் வரும் பிப்ரவரி  மாதத்தில் அருந்ததியர் எழுச்சி மாநாடு

ஈரோட்டில் வரும் பிப்ரவரி மாதத்தில் அருந்ததியர் எழுச்சி மாநாடு

18/Dec/2020 05:26:29

ஈரோடு, டிச: அருந்ததியர் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் வரும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.

 ஈரோட்டில் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில தலைவர் வடிவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை  நடந்த அருந்ததியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்துக்கு, ஆதி தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் கல்யாணசுந்தரம் , பெருமாள்ராஜ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு அரச்சலூர் அடுத்த நல்லமங்காபாளையத்தில் நினைவுச் சின்னமும் மணிமண்டபமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு அமைக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்  குயிலிக்கு சிவகங்கையில் தனி நினைவு  மண்டபம் அமைக்க வேண்டும். அருந்ததியர் சமூகத்திற்கு என்று தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். அருந்ததியர் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் வரும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Top