logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12, 594 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12, 594 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

17/Dec/2020 07:41:11

ஈரோடு- டிச:ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தீபாவளி பண்டிகைக்கு பிறகு குறைய தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 100 -ல்  இருந்து 40-க்கு கீழ் குறைந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கு எடுத்த தடுப்பு நடவடிக்கையே முக்கிய காரணமாக உள்ளது. 

மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக பொதுமக்கள் அலட்சியமாக இருந்து விடாமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. வயதானவர்கள் ,குழந்தைகள் முக கவசம் இன்றி நடமாடுவதை காணமுடிகிறது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 88 கடந்தது. நேற்று 39 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். என்னால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 594  ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Top