logo
தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து கோபிச்செட்டிபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகட்சியினர் 300 பேர் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து கோபிச்செட்டிபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகட்சியினர் 300 பேர் கைது

05/Dec/2020 03:31:33

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு இடதுசாரிகட்சிகள் சார்பில் தில்லியில் தொடர்ந்துபோராடும் விவசாயிகளுக்குஆதராவாகவும் வேளாண் சட்டத்தை திரும்பபெறவலியுறுத்தியும் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டகம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் மூன்றுவேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தசட்டம் உள்ளிட்டஒட்டுமொத்தமக்களையும் அழிக்க கூடிய  பாஜகஅரசுமக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாககூறியும் வேளாண் சட்டங்களைதிரும்பப்பெறவலியுறுத்தியும் தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறவலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் இடதுசாரிகட்சிகள் சார்பில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்தின் போதுதேசத்தின் வாழ்வாதரத்தை பாதுகாக்க தலைநகர் டெல்லியின் வீதிகளில் தொடர்ந்துபோராடும் விவசாயிகளுக்குஆதரவாகவிவசாயிகளின் போராட்டத்தைவன்முறை மூலம் ஒடுக்கும் மத்திய அரசுக்கு எதிராக கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவும் விவசாயிகள் நிலத்தை பறிக்கவும் முனையும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக் கட்டும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் உணவுப்பொருட்கள் பதுக்கலையும் பற்றாக்குறையை ஏற்படுத்தி விலை உயர்வுக்கு வழிவகுக்கும் விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தசட்டம் ஆகிய மத்தியஅரசின் விவசாய விரோத சட்டங் களையும் மின்துறையை தனியாரிடம் கொடுக்க வழி வகுத்துள்ள மின்சாரச் சட்டம் 2020-ம் திரும்பப் பெறவேண்டும்  என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்  நடைபெற்றது.

கோபிச்செட்டிபாளைத்தில் நடைபெற்ற  இந்தமறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டசெயலாளர் ரகுராமன் சிபிஐ ஈரோடு வடக்கு மாவட்டசெயலாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் முத்துச்சாமி ஜி.பழனிச்சாமி, கோமதிவிஜயராகவன், வி.பி.பழனிச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தணிகாச்சலம், கெம்புராஜ் சகாதேவன், மாரிமுத்துமுருகேசன், எஸ்.மாணிக்கம், வி.ஆர்.மாணிக்கம், விஜயகுமார், அகில இந்திய விவசாயசங்க மாவட்டத்தலைவர் முனுசாமி ஜெகநாதன்.

சிபிஐ நிர்வாகிகள் மாதேஸ்வரன், பாலதண்டாயுதம், பாலமுருகன், பரமேஸ்வரன், கந்தசாமி கிருஷ்ணகுமார், துளசிமணி, சின்னச்சாமி, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். 300-க்கும் மேற்பட்டகம்யூனிஸ்ட் கட்சியினர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனால் ஈரோடு - மைசூருதேசியநெடுஞ்சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Top