logo
20 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் புரெவி புயல் !

20 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் புரெவி புயல் !

03/Dec/2020 11:57:40

கடந்த 2000-ஆம் ஆண்டு (20 ஆண்டுகளுக்கு முன்னர்)  இலங்கையின் திருகோணமலையை சின்னாபின்னமாக்கியபிறகு தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒரு புயல் கரையை கடந்தது. ஏறத்தாழ அதே பாதையிலேயே இப்போது புரேவி பயல் பயணிக்கிறது. 

இலங்கை எனும் ஒரு நாட்டின் கரையை கடந்து இந்தியா என்ற மற்றொரு நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் புயல் கரையை கடப்பது என்பது அபூர்வமான நிகழ்வாகும். 2000-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான யுத்தம் உச்சத்தில் இருந்த காலம்.

அப்போதுதான் மிகவும் தீவிரமான புயல் உருவாகி திருகோணமலையை கடுமையாக தாக்கியது. இதில் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த புயல் அப்படியே இலங்கையை கடந்து தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியில் கரையை கடந்தது. இருநாடுகளிலும் தமிழர் நிலப்பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுப் போனது இந்த புயல்.

இப்போதைய புரேவி புயலும் கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டு புயலின் பாதையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது என்பதை முந்தைய செயற்கைகோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆச்சரியம் தரக் கூடியதாக இருக்கிறதுஎன்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்..

Top