logo
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 38 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 38 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

25/Nov/2020 05:47:42

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று (24.11.2020) முதல் இன்று (25.11.2020 வரை 38 மரங்கள் விழுந்துள்ளன. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பெருமழை காரணமாக நேற்று (24, 11 2070) முதல் இன்று (25.11.202 காலை 8.00 மணி வரையில் வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர் பெரவள்ளூர், எழும்பூர், அபிராமபுரம் கொருக்குப்பேட்டை வளசரவாக்கம், யானைகவுனி, கொரட்டூர், கொடுங்கையூர் நுங்கம்பாக்கம் கீழ்ப்பாக்கம் சூளைமேடு, மயிலாப்பூர், வேப்பேரி, அரும்பாக்கம் உட்பட 26 காவல் நிலை எல்லைக்குட்பட்ட இடங்களில் விழுந்த 3 மரங்களை சென்னை பெருநகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். மரங்கள் விழுந்ததில் 4 இலகு ரக வாகனங்கள் சேதமடைந்துள்ளன. புயல் கரையைத் தொட்டுவிட்ட நிலையில், சென்னை நகரில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க்கூடும் என்பதால், சேதமும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Top