logo
அரசு பள்ளியில் படித்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவ மாணவிகள் 11 பேரின் கல்வி கட்டணத்தை நானே செலுத்த உள்ளேன்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  அறிவிப்பு

அரசு பள்ளியில் படித்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவ மாணவிகள் 11 பேரின் கல்வி கட்டணத்தை நானே செலுத்த உள்ளேன்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவிப்பு

19/Nov/2020 04:58:27

புதுக்கோட்டை: அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியா;களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில்  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சாதனை புரிந்துள்ளார். இதன் பயனாக இந்த ஆண்டு 313 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 மருத்துவ இடங்களை முதற்கட்டமாக ஒதுக்கி கிராமப்புற மாணவ, மாணவிகளின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலமாக இந்த ஆண்டு 405 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளியில் படித்த 11 மாணவ மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் அவர்களுடைய கல்வி கட்டணத்தை நானே செலுத்த உள்ளேன் என்றார்.

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை:

 கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தமிழக அரசு பள்ளிகளில் படித்து பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்றும் அதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் மு க ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  அது முற்றிலும் தவறானது. அந்த மாணவி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல.அவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இருப்பிடமும் நாமக்கல் மாவட்டம் தான்   என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மருத்துவக் கலந்தாய்வு சுகாதாரத்துறையின் விதிமுறைகளின் படி  நேர்மையாக வெளிப்படை தன்மையுடன்  நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவே பெறப்பட்டுள்ளது. ஒரே மாணவர் 2 மாநிலங்களில் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க உரிமையுள்ளது.

ஆனால் தமிழகத்தின் விதிமுறைகளின் படி தமிழகத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் ஒரு மாநிலத்தில் மட்டுமே பெற முடியும். தேவையான குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாநிலங்களிலும்  உரிமை கோருபவர்கள்   மீது சட்டப்புபூர்வ குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

 ஸ்டாலின் குற்றச்சாட்டை கூறும் போது அதன் உண்மைத் தன்மையை அறிந்து குற்றச்சாட்டை கூற வேண்டும்.ஸ்டாலின் கூறிய பொய்யான குற்றச்சாட்டால் இன்றைக்கு ஒரு குடும்பமே தற்போது மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த மாணவி கேரளாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மென்ட கோட்டாவில் சேர விண்ணப்பித்துள்ளார். அவருக்கு தற்போது ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது என்று  ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு  பதிலடி கொடுத்தார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.


Top