logo
8 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும்   ரூ.16 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

8 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் ரூ.16 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

18/Nov/2020 09:51:32

ஈரோடு:கோபிச்சசெட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூர் ஊராட்சியில் அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் பூமிபூஜை விழா நவ.18-இல் நடைபெற்றது. 

விழாவிற்கு ஈரோடு மாவட்ட கஆட்சியர்  சி.கதிரவன் தலைமை  வகித்தார். கோபி ஆர்.டி.ஓ.ஜெயராமன், தாசில்தார் தியாகராஜன் ஊராட்சிதலைவர்கிருபா, துணைத்தலைவர் பூபதி முன்னாள் தலைவர் என்.ஆர்.பழனிசாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, முதியோர் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான உத்தரவையும் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் கோபி ஒன்றியக்குழு தலைவர் மௌதீஸ்வரன்,  வட்டார வளர்ச்சி அதிகாரி பசீர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதைப்போல் பா.வெள்ளாளப்பாளையம், நஞ்சைகோபி, குள்ளம்பாளையம், மொடச்சூர், நாதிபாளையம், நாகதேவம்பாளையம், வெள்ளாங்கோவில் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்-கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்து, மொத்தம் 144 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவை வழங்கினார்.

Top