logo
ஈரோடு மாவட்டத்தில் 416  பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு: கடிதம் மூலம் தகவல் தெரிவிக்க வசதி

ஈரோடு மாவட்டத்தில் 416 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு: கடிதம் மூலம் தகவல் தெரிவிக்க வசதி

10/Nov/2020 12:08:26

ஈரோடு:கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது .வைரஸ் தாக்கம் குறைவாக காரணத்தால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. தற்போது மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலமும் அரசு கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடம் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைய தொடங்கியதன் காரணமாக வருகிற 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் பண்டிகை காலமாக உள்ளதால் பள்ளிகளை திறந்தால் வைரஸ் தொற்று அதிகமாகும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


எனவே, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர் உங்களின் கருத்துகளை கேட்டு அதன்படி அரசு முடிவு எடுக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 9.11.2020-இல் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

ந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு மாணவர்கள் வரவேண்டாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்கள் மற்றும் வந்தால் போதும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு பள்ளிகளுக்கு வர இயலாத பெற்றோர்கள் தங்களது கருத்துகளை தபால் மூலம் அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 416 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதற்காக பள்ளிகள் சார்பில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது பெற்றோர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்தது காலை ஒன்பது முப்பது மணியிலிருந்து பெற்றோர்கள் வர தொடங்கினர். பெற்றோர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர் பள்ளியின் நுழைவாயில் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப் படுத்தப்பட்டன. மேலும் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்து கண்டறியப்பட்டது.

பெற்றோர்களுக்கு ஒரு விண்ணப்பம் வழங்கப்பட்டது அதில் மாணவர்கள் பெயர் பயிலும் வகுப்பு பிரிவு பெற்றோர்கள் பெயர் செல்போன் எண், 16 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாமா? திறக்க கூடாது என கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது அதில் பெற்றோர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆசிரியரிடம் வழங்கினர். பெற்றோர்களிடம் வாங்கப்படும் விண்ணப்பங்கள் இன்னும் ஓரிரு நாளில்  பள்ளி கல்வி துறைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top