logo
 தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை கீழராஜ வீதியில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திறப்பு.

தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை கீழராஜ வீதியில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திறப்பு.

09/Nov/2020 11:26:52

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகை வருகிற 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடை, பட்டாசு வாங்குவதற்காக அதிகஅளவில் கூடும்போது சமூக விரோதிகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் புதுக்கோட்டையின் பிரதான சாலையான கிழக்கு ராஜவீதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமெரா கட்டுப்பாட்டு அறை இன்று(9.11.2020) திறக்கப்பட்டது.

 பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை பட்டாசு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையின் பிரதான சாலையாக அனைத்து விதமான கடைகளும் நிறைந்த பகுதியாக உள்ள கீழராஜ வீதியில் உள்ள சாலையோர கடைகள் உள்ளிட்ட அனைத்துவிதான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் தீபாவளி விற்பனை சூடு பிடித்துள்ளது. 

இதனையடுத்து பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் திருட்டு, பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தடுக்க காவல் துறையினர் சார்பில் கீழராஜ வீதியில் 32 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அறை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் கீழ ராஜ வீதியில் நடந்து சென்று அனைத்து பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் மட்டும் 250 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கீழராஜ வீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 32 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது,.

நகர் முழுவதும் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடைசி மூன்று தினங்களுக்கு மட்டும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டவுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி இருக்க அனைத்து விதஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்களும் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார். 


Top