logo
பொதுமக்கள் தவறான பணப்பரிமாற்றத்தை  தவிர்க்க வேண்டும: விஜிலென்ஸ் டிஎஸ்பி மணிகண்டன் பேச்சு

பொதுமக்கள் தவறான பணப்பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும: விஜிலென்ஸ் டிஎஸ்பி மணிகண்டன் பேச்சு

30/Oct/2020 10:38:58

புதுக்கோட்டை: ஊழலைத் தடுக்க    பொதுமக்கள்  தவறான பணபரிமாற்றச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது அவசியமானதாகும் என்றார்  புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் காவல்துறை துணைக்கண்காணிப்பாளா மணிகண்டன்.


புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியும், புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையும் இணைந்து  நடத்திய விழிப்பான இந்தியா ,செழிப்பான இந்தியா  என்ற தலைப்பிலான விழிப்புணர்வு  முகாமில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  மேலும் அவர் பேசியது:

 ஊழல் தடுப்புத்துறையானது நம் இந்திய அரசால் தன்னாட்சித் துறையாக நிர்வகிக்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு நாடு வளமான தேசமாக இருப்பதோடு மட்டுமன்றி ஆரோக்கியமான தேசமாகவும் இருத்தல் வேண்டும்.

 அதற்கு நாட்டின் தலைவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் தவறான பணபரிமாற்றச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது அவசியமானதாகும். அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது ஊழல் தடுப்புத்துறையின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஒட்டுமொத்த வாழ்வும் சீரழிந்து போகிறது. தவறு செய்பவர்களுக்குத் தண்டணை அளிப்பதைக்காட்டிலும் தவறே இல்லாமல் தடுப்பதே சிறந்த செயல்பாடாகும்.   இதன் காரணமாகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் கல்லூரி பேராசிரியர்களாகிய உங்களிடம் நடத்தி இளைய சமுதாயத்தைச் சமூக சிந்தனை உடையவர்களாக உருவாக்க முயற்சி மேற்கொள்கிறோம் என்றார்.


 மேலும், ஊழல் தடுப்புத்துறையின் செயல்பாடுகள், ஒழுங்குமுறை குறித்த தகவல்கள்  குறித்துபங்கேற்பாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் தெளிவான விளக்கமளித்தார். அதற்கு முன்னதாக தலைமை உரையாற்றிய கல்லூரியியின் முதல்வர்; முனைவர் ஜ.பரசுராமன் சமுதாயத்தின் சிற்பிகளாக வழக்குரைஞர்கள். மருத்தவர்கள், மதப்பிரசாரகர்கள், ஆசிரியர்கள் என பலர்  இருந்தாலும் ஆசிரிர்களே மிக சிறந்த சிற்பிகளாக கருதப்படுகிறார்கள். அதற்கு காரணம் ஒரு எதிர்கால விழிப்புணர்வுமிக்க அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே அதனால்தான் இந்நிகழ்ச்சி உங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நோக்கத்தை உணா;ந்து சிறப்பாக செயல்படவேண்டுமமெனக் குறிப்பிட்டார். 

புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் ஆய்வாளர்   பீட்டர், ஊழல் தடுப்புத்துறையின் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அதனால் தனி மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் குறித்து  விளக்கமளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிறைவாக காவல்துறை துணைக்கண்காணிப்பாளா; ஊழலற்ற தேசத்தை உருவாக்குவதைக் குறித்த உறுதிமொழியை வாசிக்க அனைத்து பேராசிரியார்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா;. 

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.தயாநிதி வாழ்த்துரை வழங்க, நாட்டு நலப்பணித்திட்ட திட்டஅலுவலரும், வேதியியல் துறைத்தலைவா; முனைவர் சி.முத்துக்குமார்; நன்றி  கூறினார். 

Top