logo
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் ஐ.என்.டி.யூ.சி  வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் ஐ.என்.டி.யூ.சி வலியுறுத்தல்

30/Oct/2020 04:43:17

ஈரோடு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  ஈரோடு மண்டலம் தேசிய தொழிலாளர்கள் சங்கம் (ஐஎன்டியூசி)25-ஆவது செயற்குழுக் கூட்டம் மூலப்பட்டறையில் உள்ள ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு நிர்வாக தலைவர் ரவி தலைமை  வகித்தார். பேரவைச் செயலாளர் அய்யப்பன், துணைத் தலைவர் ரவி துணைச் செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க  வேண்டும். கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்த அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தொகையாக ரூ 50 லட்சம் வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் டீசல் வசூல் கேட்டு தொழிலாளர்களை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டல பொதுச்செயலாளர் துரை சாமி, நிர்வாகிகள் மக்பூல், பாபு விஸ்வநாதன் சிவக்குமார் ஞானசேகரன் செந்தில் பார்த்தசாரதி பிரபாகரன் வியாசர் உட்பட அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.  முன்னதாக கொரோனா  வைரஸ் நோயால் உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ காளான், முன்னாள்  வசந்தகுமார் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Top