logo
ஊரடங்கை மீறினால் 6 மாதம் சிறை: விழிப்புணர்வு பணியில் நீதிமன்றம்.

ஊரடங்கை மீறினால் 6 மாதம் சிறை: விழிப்புணர்வு பணியில் நீதிமன்றம்.

27/Apr/2020 02:00:49

ஊரடங்கை மீறினால் அபராதத்துடன் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


கரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும், அதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்தும் பல்வேறு துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதையும் மீறுவோர் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறுவோர் மீது விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து நீதிமன்றமே களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.


அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டம் முழுவதும் துண்டறிக்கைகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலங்குடி நீதிமன்றத்தின் சார்பில் மக்கள் நீதிமன்றப் பணியாளர் கே.செந்தில்ராஜா நேற்று பல்வேறு கிராமங்களுக்கு சென்று துண்டறிக்கைகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அரசு பொது ஊரடங்கு உத்தரவை மீறுதல், நோயை பரப்பும் விதமாக நடந்துகொள்ளுதல், தெரிந்தே தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறுதல், ஊரடங்கு உத்தரவை மீறுதல், அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம், கொள்ளை நோய் ஒழிப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் துண்டறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 எனவே, இத்தகைய தண்டனைகளுக்கு ஆளாகாமலும், வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாகவும் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என துண்டறிக்கைகளை கொடுத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Top