logo
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

29/Oct/2020 09:41:24

சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க 3 அல்லது 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

7.5% உள் ஒதுக்கீடுக்கு  45 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை இதுகுறித்து நீதிமன்றமும் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு சட்டப்பேரவையில்   நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் 

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா-அரசாணையா தமிழக அரசு  வெளியிட்டது.மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


Top