logo
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

27/Oct/2020 10:08:10

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  இன்று (27.10.2020)  பரிசுகளை வழங்கினார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: பொதுமக்களிடையே சுற்றுலா குறித்த விழிப்புணறஅவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் நாள் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்திலும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 27.9.2020 அன்று உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும் சுற்றுலா குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவர்களுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி, வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு  பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுலா தலங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற்று சுற்றுலா வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் ஆட்சியர்.உமாமகேஸ்வரி.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள்  உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.


Top