logo
கீழாநிலைக்கோட்டை வெடி விபத்து: பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூ, கோரிக்கை

கீழாநிலைக்கோட்டை வெடி விபத்து: பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூ, கோரிக்கை

27/Oct/2020 05:50:29

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் (26.10.2020) நேற்று இரவு நேரிட்டவெடி விபத்து வீடு தரை மட்டமானதுடன் அருகிலிருந்த17 வீடுகள் மற்றும் சர்ச் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில்,  மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது..

புதுக்கோட்டையை சேர்ந்த வெடி வியபாரி குணசேகரனின் மகன்கள் விக்கேஷ்.விஜய் மற்றும் அவர்களின் உறவினர் அண்ணாமலை ஆகியோர் கீழாநிலைக்கோட்டையில் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் வெடிகளை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தனர். 

சென்ற 2018 -ஆம் ஆண்டில் இந்தத்தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.இதனால் அச்சம் அடைந்த மக்கள் இத் தொழிற்சாலை மீண்டும் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இயங்க கூடாது என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வழியுறுத்தி வந்தனர்.எந்த வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், 26.10.2020 .இரவு 9.45.மணியளவில் பயங்கர சப்தத்துடன் வெடி மருந்து தொழிற்சாலை வெடித்து சிதறியது.. இதனால் பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை, .அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர். எஸ்.சங்கர். சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் ஜி.நாகராஜன். விவசாயிகள் சங்க அரிமளம் ஒன்றிய செயலாளர் எம்.அடைக்கப்பன். விதொச ஒன்றிய தலைவர் நெடுங்குடி கணேசன். மற்றும் வீரப்பன் ஆகியோர் பார்வையிட்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Top