logo
சிலம்பொலி செல்லப்பனார் மணிமண்டபத்துக்கு இன்று அடிக்கல்

சிலம்பொலி செல்லப்பனார் மணிமண்டபத்துக்கு இன்று அடிக்கல்

27/Oct/2020 11:34:56

 நாமக்கல்: தமிழறிஞரும், எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான   சிலம்பொலி சு. செல்லப்பன். நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் எனும் ஊரில் சுப்பராயன், பழனியம்மாள் ஆகியோருக்கு மகனாக 22 டிசம்பர் 1929-இல்  பிறந்தார். 

கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், மாவட்டக் கல்வி அலுவலர், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர்(1968), தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பரிந்துரைக்கும் குழுவின் தலைவர் (1999) ஆகிய பதவிகளை வகித்தவர். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் உட்படப் பல நூல்களை எழுதியிருக்கிறார்.  இவர், 6 ஏப்ரல் 2019 -இல் காலமானார். 

 நாமக்கல்  மாவட்டம், சிவியாம்பாளையம் ஊராட்சி, தாதம்பட்டிமேட்டில் சிலம்பொலி செல்லப்பனாரின் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா இன்று(27.10.2020) நடைபெற்றது. இதில், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்   


Top