logo
ஆயுத பூஜை நாளில் சாலைகளில் பூசணிக்காயை உடைத்தால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

ஆயுத பூஜை நாளில் சாலைகளில் பூசணிக்காயை உடைத்தால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

25/Oct/2020 09:14:27

ஈரோடு: ஆயுதபூஜையைத் தொடர்ந்து திங்கள்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இப்போதே  மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். இதையொட்டி அனைத்து தொழில் நிறுவனங்கள் சுத்தம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு திருஷ்டி போகும் வகையில் பூசணிக்காய் உடைத்து, வாழைத் தார்கள் கட்டி பூஜை செய்து வழிபடுகின்றனர். 

மறுநாள் அவை அனைத்தையும் சாலைகளில் வீசிச் சென்று விடுகின்றனர். மேலும் வாழைத்தார்கள், காய்கறிகள் போன்றவையையும் ரோடுகளிலும் தெருக்களிலும்  ஆங்காங்கே வீசி சென்று விடுகின்றனர். சில இடங்களில் இதனால்  விபத்துகள் கூட நடந்து உள்ளது.  இதனால் இந்த ஆண்டு ரோடுகளில் பூசணிக்காயை வீசி செல்லக் கூடாது என்றும், அவர் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன் கூறுகையில், ஆயுதபூஜை விஜயதசமி பூஜை ஒவ்வொரு  ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தொழில் நிறுவனங்கள் வீடுகளில் பூஜை செய்து வாழைத்தார் கட்டி வைத்து வெள்ளை பூசணிக்காயை  திருஷ்டி போக்கும் வகையில் உடைக்கின்றனர். ஆனால் உடைத்த பூசணிக்காய் மற்றும் வாழைத்தார்களை   சில இடங்களில் ரோடுகளில் அப்படியே வீசி விட்டு சென்று விடுகின்றனர் இது தவறான செயலாகும். 

மக்கள் பண்டிகையை தாராளமாகக் கொண்டாடலாம். ஆனால் பூசணிக்காயை வாழைத்தார் போன்றவற்றை ரோட்டில் வீசி செல்லக் கூடாது. அவ்வாறு வீசு சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு பகுதியிலும்  தூய்மைப் பணியாளர்கள் வருவார்கள். அவர்களிடம் பூசணிக்காய் மற்றும் வாழைத்தார் காய்கறி கழிவுகளை கொடுக்க வேண்டும். மேலும் வாழைத்தார் பூசணிக்காய் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வியாபாரம் முடிந்தவுடன் மீதமுள்ள வற்றை அவர்கள் தாங்களாகவே எடுத்துச் செல்ல வேண்டும். அவற்றை ரோட்டில் வீசுவதோ அல்லது ஓரிடத்தில் குவித்து வைப்பதோ கூடாது என்றார். 


Top