logo
ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.79.40 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்: எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.79.40 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்: எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்

24/Oct/2020 01:31:49

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.79.40 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்: எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ரூ 79.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு  ஆகியோர் இன்று(24.10.2020) தொடங்கி வைத்தனர்.

தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் ரூ 19 லட்சம் மதிப்பில்  மேற்கொள்ளப்படவுள்ள சாலை சீரமைக்கும் பணிக்கான  பூமி பூஜை  விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ் .தென்னரசு ஆகியோர்  பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தனர்.

 இதைப்போல் காமராஜர் நகரில்  ரூ.16.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பூம்புகார் நகரில் வடிகால் வாரியம் சார்பில் ரூ.17 மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையிலும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் அம்பேத்கர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை, எல் .ஜி. எஸ் காலனி பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர் .அதைத் தொடர்ந்து, ஈரோடு வ.உ.சி பார் பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பில்  நவீன கழிப்பிடம் அமைப்பதற்கான பூமி பூஜையிலும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் கே சி பழனிச்சாமி பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், ஜெயராஜ் ,தங்கமுத்து, ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top