logo
ஈரோடு மாவட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா, காரத்தே பயிற்சி

ஈரோடு மாவட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா, காரத்தே பயிற்சி

24/Oct/2020 01:26:22

ஈரோடு:ரோடு மாவட்டத்தில் போலீசாருக்கு கவாத்து பயிற்சியுடன் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா, காரத்தே பயிற்சிகளுடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் இன்று(24.10.2020) நடத்தப்பட்டது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அனைத்து மாவட்ட போலீசாரும் சனிக்கிழமை தோறும் கவாத்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை அனைத்து போலீசாரும் கவாத்து பயிற்சி மேற்கொண்டனர்.

அதேபோல், இன்று ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், எஸ்பி தங்கதுரை தலைமையில் போலீசார் கவாத்து பயிற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கும் வகையில் தியானம், யோகா, காரத்தே பயிற்சியுடன் , விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

 ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்தில் ஈரோடு நகர் துணைக்கோட்ட டிஎஸ்பி ராஜூ தலைமையில் போலீசார் கவாத்து பயிற்சி, யோகா, காரத்தே போன்றவை நடந்தது. இதேபோல், கோபி, பவானி, சத்தி, பெருந்துறை சப் டிவிசன் பகுதிகளில் அந்தந்த டிஎஸ்பி.,க்கள் தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களில் கவாத்து பயிற்சி மற்றும் மன அழுத்ததை குறைக்கும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Top