logo
40 ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

40 ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

24/Oct/2020 12:08:45

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீழ்குடி கிராமத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பாதை இல்லாமல் கிராம மக்கள் தவித்து வரும் நிலை தொடர்கிறது. 

அறந்தாங்கி அடுத்த கீழ்குடி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு சரியான பாதை இல்லாமல் விவசாயம் செய்யும் விளைநிலத்தின் வழியாகவே சென்று  இறந்தவர்களை தகனம் செய்யுந் நிலை உள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில்.

கடந்த 40 ஆண்டு காலமாக எங்கள் பகுதியில் இதே நிலைதான் தொடர்கிறது. விவசாயம் செய்து நெல் விளையும் பயிர்களை மிதித்து செல்வது எங்களது தாயை மிதிப்பது போல் எங்களுக்கு மன வேதனையாக உள்ளது. மேலும் அரசு நிர்வாகம் இதனை உடனடியாக கவனம் செலுத்தி எங்களது சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தார்ச் சாலையாக மாற்றி அமைத்து தர  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கீழ்குடி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் பொழுது விவசாயம் செய்யும் விளைநிலத்தின் வழியாகவே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. அப்படி செல்லுகையில் நெற்பயிரை மிதிப்பது ஒரு உயிரை கொன்று கடந்து செல்வது போல் உள்ளது.

பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இதனை உடனடியாக கவனத்திலெடுத்து சுடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான பாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கிராம மக்கள் கூறினர். 


Top