logo
புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் ஸ்கேன் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் ஸ்கேன் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

21/Oct/2020 07:40:28

புதுக்கோட்டை: கர்ப்பக்காலத்தில் கருவின் வளர்ச்சி, ஆரோக்கியம் சீராக இருக்க மருத்துவ பரிசோதனைகள் மிகவும் முக்கியம். தவறாமல் செய்ய வேண்டிய பரிசோதனையில் ஸ்கேன் பரிசோதனையும் ஒன்று. ஆனால் ஸ்கேன் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று நினைக்கும் கர்ப்பிணிகளும் நம்மிடையே உண்டு. ஆனால் ஸ்கேன் செய்வதால் பாதிப்பு உண்டாகுமா,  எப்போது செய்ய வேண்டும், எதற்காக செய்கிறோம், இதனால் என்ன நன்மை, போன்றவற்றை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில் கர்ப்பிணிகள் சில முறையான பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மகப் பேறு மருத்துவர்கள். அப்படி செய்ய வேண்டிய பரிசோதனையில் முக்கியமானது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய உதவும் ஸ்கேன் பரிசோதனை.

கருவுற்ற காலங்கள் தொடங்கி பேறுகாலம் வரை குறிப்பிட்ட இடைவெளியில் கருவின் வளர்ச்சி சீராக இருக்கிறதா என்று மருத்துவர்களே இந்த பரிசோதனைக்கு அறிவுறுத்துவார்கள். தாய் சேய் ஆரோக்கியம் பற்றி தெரிந்துகொள்ளவே ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.

வயிற்றில் குழந்தை இருக்கும் போது ஸ்கேன் செய்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் அநேக பெண்களிடம் உண்டு. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது எக்ஸ்ரே போன்று எக்ஸ்ரே கதிர் வீச்சு பாய்ச்சப்படுவதில்லை. ரேடியேஷன் கதிர்வீச்சும் இல்லை. இது ஒலி அலைகளை மட்டுமே பயன்படுத்தி அதன் பிரதிபலிப்பில் தான் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

அதனால் கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் எடுக்கப்படுவது குழந்தைக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக் காது. மாறாக குழந்தையின் வளர்ச்சி, உறுப்புகள், ஆரோக்கியம், ஏதேனும் குறைபாடு போன்றவற் றை கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க உதவுகிறது.

​ஸ்கேன் பரிசோதனை ஏன்

கருவுற்ற 45 நாட்களில் முதல் ஸ்கேன் எடுக்க வேண்டும். இந்த ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது கரு எந்த இடத்தில் இருக்கிறது. எந்த நிலையில் இருக்கிறது. கருவின் வளர்ச்சி, பிரசவ தேதி போன்றவற்றை கணிக்க முடிகிறது.

மேலும் கருவின் ஆரோக்கியம் அல்லது கரு உள்ளுக்குள் இல்லாமல் புறகர்ப்பமாக இருக்கிறதா என் பதை அறிந்துகொள்ள உதவும். அடுத்தது 13 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேன். இதில் கருவின் மூளை வளர்ச்சி, தலை, முகம், கால், முதுகெலும்பு போன்றவற்றை கவனித்து குழந்தையின் ஆரோக்கியம் சீராக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதில் ஏதும் குறை இருந்தாலும் அதற்கு சிகிச்சை அளிக்க உதவும்.

சிலருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது குழந்தையின் வளர்ச்சியில் ஊனம், குறை, கழுத்து பின்புறம் இருக்கும் தோலின் தடிமன் அளவு (இவை அதிகமாக இருந்தால் குழந்தைக்கு குறைபாடு இருக்க வாய்ப்புண்டு) மரபணு குறைபாடு, உதடு பிளவு என்று அனைத்துவிதமான குறைபாட்டை யும் கண்டறிய உதவும் ஒரு வரப்பிரசாதமே ஸ்கேன் என்று சொல்லலாம்.

அப்படி கருவில் குறை இருந்தாலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளித்து குழந்தையின் வளர்ச்சியை சீராக்கவும் முடியும். அதனால் குறைபாடு இருப்பது தெரிந்தால் தொடர்ந்து குழந்தையின் வளர்ச் சியை கண்டறிய அவ்வபோது ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவர் அறிவுறுத்தினாலும் அவரது ஆலோசனையின் பெயரில் முறையான பயிற்சி பெற்ற ஸ்கேன் சென்டரில் எடுத்துக் கொள்வது நல்லது.

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனை வளாகத்தில் ஸ்கேன் எடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்

கருத்தரிப்பதில் இருந்து  குழந்தைப்பேறு வரை ஸ்கேன் செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கொரானா காலத்தில் கருவுற்ற தாய்மார்கள் படும்பாடு பெரும் துயரமாக இருக்கிறது.. எல்லா தனியார் ஸ்கேன் சென்டர்களிலும் முன்புபோல் எளிதாக  எடுக்கமுடியவில்லை. முதலில் முன்பதிவு செய்ய வேண்டும். அப்புறம் அவர்கள் ஒதுக்கும் நேரத்துக்குத்தான்  ஸ்கேன் எடுக்க வர வேண்டும். மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு முன்பு அரசு மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் வசதி இப்போது இல்லை. 8 கிமீ தொலைவிலுள்ள . மருத்துவக் கல்லூரிக்குத்தான் போக வேண்டும்.

 தாய்மார்களின் நலன் கருதி அரசு பழைய மருத்துவமனை கட்டிடத்தில் ஸ்கேன் எடுக்கும் வசதியை ஏன் செய்துதரக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.. தனியாரிடம் அதிகம் பணம் கொடுத்து பெறும் வசதியை  நியாயமான குறைந்த கட்டணத்தில்  அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் காத்திருக்கின்றனர். 


Top