logo
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

21/Oct/2020 06:02:52

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் உண்டியலில் இருந்த காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. 

அறந்தாங்கி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் 30 நாட்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும். இக்கோயிலில்வடக்கு திசை பார்த்த நிலையில் அம்மன் அமர்ந்திருப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு. 

இங்கு  திருமணம் ஆகாதவர்கள் ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு நேர்த்திக்கடனாக பொட்டு காணிக்கை செலுத்தினால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனையே அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் தங்களது காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி விடுவார். கோயிலின் உண்டியல் எண்ணும் பணி ஆண்டின் இறுதிவாக்கில் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டில் கோயில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக கடந்த நான்கைந்து மாதங்களாக  கோயில்கள் அனைத்தும் சார்த்தப்பட்டிருந்த நிலையில் கோயில்களில் பக்தர்களின் காணிக்கை குறைந்த அளவே காணப்பட்டது.  அதுபோல் இந்த ஆண்டிற்கான உண்டியல் எண்ணும் பணியின்போது,  உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக தங்கம் சுமார் 66 கிராமும் வெள்ளி சுமார் 300 கிராமும் ரொக்கம் சுமார் 2.25 லட்சமும்  இருந்தது.  

உண்டியல் எண்ணும் பணியின்போது இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் கண்ணன் அலுவலக உதவியாளர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். திருக்கோயில் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கோயில உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.


Top