logo
ஆயுத பூஜையையொட்டி ஈரோடு சந்தையில் குவிந்த வெள்ளை பூசணிக்காய்

ஆயுத பூஜையையொட்டி ஈரோடு சந்தையில் குவிந்த வெள்ளை பூசணிக்காய்

21/Oct/2020 05:51:39

ஈரோடு ஆயுதபூஜை வரும்  ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று(அக்.21) ஈரோடு வஉசி பூங்காவில் புதிதாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில்  சத்தியமங்கலம், தாளவாடி, கோபி  போன்ற பகுதிகளில் விளைந்த  ஏராளமான வெள்ளைப் பூசணிக்காய் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடும் பல்வேறு தொழில் நிறுவனங்கள்,  வீடுகளில் திருஷ்டி சுற்றி போடுவதற்கு வெள்ளை பூசணிக்காய்யை  அதிகளவு பயன்படுத்து வார்கள்.  இதனால் இன்று வ.உ.சி  காய்கறிசந்தையில் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த வெள்ளை பூசணிக்காயை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். 

ஒரு கிலோ வெள்ளை பூசணிக்காய் ரூ.20 -க்கு விற்பனையானது.   ஆயுதபூஜை நெருங்கிவிட்டதால்  வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதைப்போல் பொரி, அவல், கடலை நாட்டு சர்க்கரை ,தேங்காய், பழம், வாழை இலை போன்றவற்றின்  வியாபாரமும்  சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்று ஈரோடு வஉசி காய்கறி  சந்தையில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதைப்போல் உழவர் சந்தைகள்,  சின்ன மார்க்கெட் போன்ற  பகுதியிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. 


Top