logo
புதுகை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 110 லி சாராயம், 1250 லி ஊரல் பறிமுதல்.

புதுகை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 110 லி சாராயம், 1250 லி ஊரல் பறிமுதல்.

21/Apr/2020 10:53:26

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிஅருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை மதுவிலக்கு போலீஸார் இன்று (ஏப்.21) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 110 லி சாராயம், சாராயம் காய்யச்ச பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 1250 லி ஊரலையும் கைப்பற்றி அழித்தனர்.


கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கறம்பக்குடி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பரிவு  காவல் ஆய்வாளர் லதா, தலைமையிலான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சி தாளக்கொல்லையில்  வீரையா என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சட்ட விரோதமாக  காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 லிட்டர் சாராயத்தையும், 1200 லிட்டர் ஊரலையும் பறிமுதல் செய்து, அதனை தரையில் ஊற்றி அழித்தனர்இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முத்தையா (27) என்பவரை கைது செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

 இதேபோல், கறம்பக்குடி அருகேயுள்ள குளப்பெண்பட்டி, வடக்குத்தெருவைச் சேர்ந்த பெருமாள் () சின்னையா(45) என்பவர் தனது தோட்டத்தில் காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் கள்ளசாராயம், 50 லிட்டர் ஊரலையும் போலீஸார்  பறிமுதல் செய்து  அழித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெருமாள் () சின்னையாவை கைது விசாரணை செய்து வருகின்றனர்

Top