logo
 தீபாவளி பண்டிகை அசாம்பாவித சம்பவங்களை தடுக்க ஈரோட்டில் 22 கண்காணிப்பு கோபுரங்கள்

தீபாவளி பண்டிகை அசாம்பாவித சம்பவங்களை தடுக்க ஈரோட்டில் 22 கண்காணிப்பு கோபுரங்கள்

19/Oct/2020 11:07:15

ஈரோடு மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி, கடைவீதிகளில் கூட்ட நெரிசலில் ஏற்படும் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவ.14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள ஜவுளி கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடை வீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி,  திருட்டுர பாலியல் சீண்டல்கள் போன்ற  குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்(வாட்சிங் டவர்) அமைக்க முடிவெடுக்கப்பட்டு, தற்போது ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நகரின் பல்வேறு  பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


Top