logo
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு- மருத்துவ சமூக சங்கம் நன்றி

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு- மருத்துவ சமூக சங்கம் நன்றி

19/Oct/2020 06:16:29

புதுக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ஜி. குரும்பபட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலையான வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தற்கும், அதற்குக்காரணமாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள் அமைப்புகளுக்கும் மருத்துவ சமூக சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் சங்க புதுக்கோட்டை மாவட்டக்கிளை நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து,  மருத்துவ சமூக சங்கம். முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.பி. முத்து வெளியிட்ட அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ஜி. குரும்பபட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் 12 வயது மகளை  கடந்த ஆகஸ்ட் 2019 மார்ச் 17-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த கிருபானந்தன் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு சிறுமியின் வாயிலும் மூக்கிலும் மின்சாரத்தை செலுத்தி மிகவும் கொடூரமான வகையில் கொலை செய்துள்ளனர்.

 இந்த வழக்கில் கிருபானந்தன் மீது மட்டும் மிகவும் காலதாமதமாக காவல்துறையி னர் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்டம் மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி புருஷோத்த மன் செப்டம்பர் 29-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

 சிறுமியை நான்தான் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தேன் என்று கிருபானந் தன் இரண்டுமுறை வாக்குமூலம் அளித்து இருந்தபோதிலும் கிருபானந்தன் மீது போதிய ஆதாரம் இல்லை என்று நீதிபதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தீர்ப்பை அளித்தார்.

இந்த செய்தி, எங்கள் முடிதிருத்தும் சமூகத்திற்கு பேரிடியாக இருந்தது தமிழக அரசு இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சுமார் மூன்றரை லட்சம் சலூன் கடைகள் அடைத்து மிகப்பெரிய அளவில் ஆங்காங்கே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. 

இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்திருந்தார்கள் அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் கல்யாணசுந்தரம். சுந்தரவள்ளி. அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு உறுதுணையாக போராட்டத்தில் களம் இறங்கிய மருத்துவ சமூகம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் மற்றும் பல அமைப்புகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  திமுக கட்சிகள், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், சிஐடியு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  போன்ற அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Top