logo
 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸார் கையெழுத்தியக்கம்

வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸார் கையெழுத்தியக்கம்

16/Oct/2020 04:37:24

 ஈரோடுஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி 7 நாள்கள் நடத்தப்படும் கையெழுத்து இயக்கம் இன்று(16.10.2020) தொடங்கியது.

த்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி அதை ஜனாதிபதியிடம் அனுப்ப தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் .அழகிரி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற உள்ளதுஈரோடு கோட்டை பெருமாள் கோவில் அருகே முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி.ரவி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களிடம்  நிர்வாகிகள் கையெழுத்துப் பெற்றனர். மேலும் வேளாண்மை மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கையும் விநியோகிக்கப்பட்டது.

 நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாசலம், மண்டலத் தலைவர்கள் அம்புலி, திருச்செல்வம் துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பஸ்கர் ராஜ், மாவட்ட செயலாளர் சாகுல், கே.என்.பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நாளை(17.10.2020) பிபி அக்ரஹாரத்திலும், வரும் 18-ஆம் தேதி வெள்ளோட்டிலும், நசியனூரிலும்,  19-ஆம் தேதி காலிங்கராயன்பாளையம் பகுதியிலும், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோயில் அருகிலும், 20 -ஆம் தேதி மரப்பாலம் பகுதிகளிலும்  கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. மொத்தம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 10 ஆயிரம் கையெழுத்து பெறப்பட்டு மாநில காங்கிரஸ் தலைமை மூலம் ஜனாதிபதிக்கு தபால்  மூலம் அனுப்பப்படுகிறது.

 

Top