logo
7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு கவர்னரின் ஒப்புதலைப் பெற முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு கவர்னரின் ஒப்புதலைப் பெற முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

15/Oct/2020 08:57:39

ஈரோடு: 60 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் அதிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு கவர்னரின் ஒப்புதலைப் பெற முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற அடையாள அட்டைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதுஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவது குறித்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் குறித்து இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. கனிணி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் சிறப்பாசியர்களுக்கும் வழக்கு முடிந்து கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். 40 வயதுக்கும் மேல் உள்ள உயர்குடி ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்பு இல்லை மற்றவர்களுக்கு 45 வயது வரை பணிவாய்ப்பு வழங்கப்படும்.

தேவையான புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் குறைப்பு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது அதன் அடிப்படையில் 60 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

 

Top