logo
தமிழக அரசு தலைமைச்செயலரின் பதவிக்காலம்  நீட்டிப்பு

தமிழக அரசு தலைமைச்செயலரின் பதவிக்காலம் நீட்டிப்பு

14/Oct/2020 03:57:14

சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இம்மாத இறுதியில் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய பணியாளர் நிர்வாகத்துறைக்கு  கடந்த ஆக.13-இல் தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Top