logo
இன்றைய சிந்தனை ( 13.10.2020)- ஆசையும்,பேராசையும்.

இன்றைய சிந்தனை ( 13.10.2020)- ஆசையும்,பேராசையும்.

13/Oct/2020 03:49:05

இன்றைய சிந்தனை:ஆசை (Desire) என்பது தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் பேராசை(Greed. அளவில்லாத பேராசை  நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப் போக்கில் நிறைவேறாமல் போகாது.

ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு  என்று கேட்டார். ஆசை என்றால் என்ன பேராசை என்றால் என்ன  என்று கேட்டார். அதற்கு, அந்த ஞானி ஒரு கதை கூறினார். ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை தங்கள் வீட்டுக் சுற்றுச்சுவரை சுற்றி வரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார். ஆனாலும் அந்த நாய் கதவில் தெரிந்த இடுக்கின் வழியே, வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக்கொள்ளும்.

அப்படிப் பேசும்போது ஒருநாள் தெருநாய் சொல்லிற்று, தினமும் இவர்கள் போடும் ரொட்டித் துண்டையே உண்கிறாயே, உனக்கு சலிக்கவில்லையா என்றது. என்னைப் பார் தினமும் குப்பைத் தொட்டிகளில் வித விதமான உணவைச் சாப்பிடுகிறேன். உனக்கு அப்படி விதவிதமாகச் சாப்பிடும் ஆசை இல்லையா என்றது.

அதற்கு அந்தப் பணக்கார நாய்,எனக்கும் உன்னைப் போலவே  விதவிதமான உணவு சாப்பிட ஆசைதான். அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றது. அப்படி என்ன பெரிய சிக்கல் உனக்கு. எங்க  வீட்டு எஜமான் தன் பெண்ணுக்கு கல்யாணம் செய்யப் பையன்களின் புகைப்படத்தைக் காட்டினார்.

அவர் பெண்ணோ யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி அடுத்த தெரு நாராயணனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அதனால் உனக்கென்ன, என்றது தெரு நாய்..அவள் அப்பாவோ மாட்டேன் என்கிறார்.இவளோ பிடிவாதமாக இருக்கிறாள்.

இன்று எஜமான் மகளிடம்  கோபமாக, இந்த நாய்க்கு உன்னைக் கட்டி வைத்தாலும் வைப்பேன். ஆனால், அந்த நாராயணனுக்கு கட்டித் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதுதான் காத்து இருக்கிறேன். பெண் மிகவும் அழகாயிருப்பாள் என்றது.  இப்போது புரிந்ததா  அந்தப் பெண் நாராயணனைக் கல்யாணம் செய்ய நினைத்தது ஆசை.

ஆனால் நாய், அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்ய நினைத்தது பேராசை என்று முடித்தார்.ஆசைப்படலாம். அது தவறு இல்லை. ஆனால் பேராசைப்படுவது தவறு என்றார் அந்த ஞானி.

ஆம் நண்பர்களே நியாமான விருப்பமே ஆசை அதே விருப்பம், நியாயமற்று இருந்தால், அது பேராசை எந்தப் பொருளின் அதிக ஆசை இல்லையோ, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை. தண்ணிரீலே எண்ணெய் கலக்கும்போது எண்ணெய் கலக்காமல்தான் இருக்கும். அதுபோல் ஆசைபட்டாலும் அந்த ஆசை  நிறைவேறும் ஆசையாகவே இருக்க வேண்டும். வாழ்வை பேராசை  என்றும் சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

Top