logo
செய்தியாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக ஈரோடு டிஎஸ்பி மீது புகார்

செய்தியாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக ஈரோடு டிஎஸ்பி மீது புகார்

13/Oct/2020 01:58:01

ஈரோடு: அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகத்திகழ்ந்து வரும் பத்திரிகையாளர்களிடம் மோதல் போக்க கடைப்பிடித்து வரும் ஈரோடு டிஎஸ்பி-மீது, ஈரோடு அனைத்து செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஊடகத்துறையினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செய்தியாளர்களுக்கு செய்தியாளர் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ,ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கென எந்த இடத்திலும் அறை ஒதுக்ப்படாத நிலை உள்ளது. இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பழைய கார் நிறுத்தும் கட்டிடத்தை செய்தியாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்கள் பயன்படுத்தி வந்த அந்த அறையை காலிசெய்ய வேண்டுமென ஈரோடு மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜூ வற்புறுத்தி வருகிறாராம். 

காழ்புணர்ச்சி காரணமாகவே  உள்நோக்கத்துடன் அச்சு, காட்சி ஊடகத்துறையினரை தொந்தரவு செய்து  பழிவாங்க நினைக்கிறார் என்று அனைத்து  செய்தி, ஊடகவியலாளர்களும் குற்றம்சாட்டுகின்றனர். ஈரோடு அனைத்து செய்தியாளர்களிடமும்  மோதல் போக்கை கடைபிடிக்கும் துணை காவல்கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செய்தியாளர்களுக்கு உரிய இடம் வழங்க வேண்டுமென மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரரைக் கேட்டு கொள்வதாகவும் ஈரோடு அனைத்து செய்தியாளர்கள் மற்றும் புகைபடக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். 


Top