logo
உத்தரப்பிரதேச பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேச பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

12/Oct/2020 04:21:38

ஈரோடு: உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டும், அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலகக் கோரியும், வேளாண்மை புதிய மசோதா சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதிப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆதி தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு காளைமாடு சிலை அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் இளங்கோவன், நிர்வாகிகள் பிரகாஷ் முருகன் சண்முகம் சென்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம்: ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்துநிறுத்தம் அருகே மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கலில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவி மகேஸ்வரி தலைமை  வகித்தார்.  செயலாளர் அருள்மணி, பொருளாளர் செல்ல லெட்சுமி, துணைத்தலைவி திலகவதி உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

                                                                               


Top