logo
OTP எண்ணால்  பொதுமக்கள், ரேஷன் கடை ஊழியர்கள் அவதி

OTP எண்ணால் பொதுமக்கள், ரேஷன் கடை ஊழியர்கள் அவதி

10/Oct/2020 08:47:59

pudukkottai:தற்பொழுது தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரேஷன் கடையில் பொருட்களை பெறுவதற்கு குடும்ப அட்டையுடன் அவர்களின் மொபைல் எண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் எண்களுக்கு OTP வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி கிடைக்கும் 

இதன் விவரம் பெரும்பாலான குடும்பத் தலைவிகளுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரிவதில்லை.பலர் கடைகளுக்கு செல்போன் கொண்டு வருவதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் 2,3 செல்போன்கள் உள்ளதால் செல்போனை மாற்றி எடுத்து வருகின்றனர்.

சில செல்போன் எண்கள் ரீசார்ஜ் செய்யப்படாமலே இருப்பதால் OTP வருவதில்லை. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணிச்சுமை கூடுவது தான் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். 

பெரும்பாலான ஊர் கடையில் பொருட்களை வாங்க அவதிப்படும் பொதுமக்கள் OTP எண் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தால் விரைவாக பொருட்கள் பெறுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு எளிதான வழிமுறைகளை ஆராய வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Top