logo
கொரோனா விழிப்புணர்வு நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை

கொரோனா விழிப்புணர்வு நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை

08/Oct/2020 06:45:31

புதுக்கோட்டையில் கொரோனா வைரஸ்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  விதத்தில் உருவாக்கியுள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 வருகின்ற 17 -ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு  குழந்தைகள் பொதுமக்கள் நவராத்திரி கொலு பொம்மைகள்   வைத்து வீடுகளில் வழிபடுவது  வழக்கம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இது போன்ற நிகழ்வுகளில் மக்கள் ஆர்வம் காட்டாமல் நோய் தொற்று பரவ கூடிய சூழ்நிலை உள்ளதால் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது.

 தற்பொழுது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் புதுக்கோட்டையில் பொதுமக்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

 புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் சந்நிதி அருகே பல வருடமாக கொலு பொம்மைகள் விற்பனை செய்துவரும் வியாபாரியான ஞான கலைசேகர் தனது கடையில்  தற்போது பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்.  

வைரஸ் தொற்றை ஏற்பட்ட நோயாளிகளை கண்டுபிடிக்கும் தெர்மல்ஸ்கேனர் வைத்து பரிசோதனை செய்வது, முகக்கவசம் அணிந்துசமூக இடைவெளியை பின்பற்றி கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் குழந்தைகள் சமூக  இடைவெளியுடன் விளையாடுவது,  மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் முக கவசம் அணிவது குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கொலு பொம்மைகள் முக கவசம்  அணிந்து இருப்பது  குறிப்பிடத்தக்கது 


Top